5 கிமீ சைக்கிளில் தாயின் பிணத்தை எடுத்து சென்ற மகன்! எங்கே போனது மனிதாபிமானம்?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கர்ப்பாபஹல் என்ற கிராமத்தில் தாயுடன் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் தாய் இறந்ததை அடுத்து, அவரை நல்லடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினரை அணுகி உள்ளார். ஆனால், அவரது சாதியை காரணம் காட்டி அவருக்கு உதவி செய்ய அக்கம் பக்கத்தினர் மறுத்துவிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி, தனது சைக்கிளின் பின்புறத்தில் தாயின் உடலை வைத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்ற மகன், அருகிலிருந்த வனப்பகுதியில் அவரை நல்லடக்கம் செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அதில் அந்த சாலையில் பலர் இரக்கமற்ற வகையில் வாகனங்களில் கடந்து செல்லும் அவலத்தையும் காண முடிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *