shadow

srirangamஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் கடைசி நாள் என்பதால் நேற்று மனுதாக்கல் செய்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இதுவரை வளர்மதி (அதிமுக) , ஆனந்த் (திமுக), சுப்பிரமணியம் (பாஜக), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்) உள்பட 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த சனிக்கிழமை வரை அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் என 17 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால், நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர்.

நேற்று ஒரே நாளீல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க. அண்ணாதுரை, தமிழ்நாடு தேவேந்திரர் குல கூட்டமைப்பின் எஸ்.எம். சேட்டு உள்ளிட்ட 21 பேரும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மாற்று வேட்பாளர் ப.பார்த்திபன் உள்ளிட்ட 8 பேரும் என மொத்தம் 29 பேர் மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் சட்டசபைக்கு 46 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையேதான் உள்ளது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தன் பலத்தை தெரிந்து கொள்ள இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஆனால் அந்த கட்சிக்கு தேமுதிக உள்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

Leave a Reply