30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 45 இந்திய இளைஞர்கள்
forbes
ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை உலகம் முழுவதிலும் உள்ள 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வருடத்திற்கான இந்த பட்டியலில் இந்திய இளைஞர்கள் 45 பேர் இடம் பெற்றுள்ளனர்.

உலகம் முழுவதிலும் மொத்தம் 600 பேரை  இந்த ஆண்டின் இளம் சாதனையாளர்கள் என போர்ப்ஸ் இந்த ஆண்டில் பட்டியலிட்டுள்ளது. தொழில்நுட்பம், கல்வி, ஊடகம், உற்பத்தி, தொழில், அறிவியல், கலை, சமூக விழிப்புணர்வு ஆகிய பல்வேறு துறைகளில் சாதனை படைத்த இளைஞர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அளவில் ஹோட்டல்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் “ஒய்ஓ ரூம்ஸ்’ இணையதள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி 22 வயது ரித்தீஷ் அகர்வால் நுகர்வோர் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்ததாக பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் 22 வயது பியானி, நீரஜ் பெர்ரி ஆகியோர் தரமான உணவைத் தேடித்தரும் “ஸ்பிரிங்’ மொபைல் ஆஃப்பை உருவாக்கியதன் மூலம் சாதனை படைத்துள்ளனர்.

சிட்டி குழுமத்தின் துணைத் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கருமான 27வயது நீலா தாஸ், மூதலீட்டு ஆலோசகர்கள் 29வயது திவ்யா நிடிமி, 29வயது விகாஷ் பாட்டீல, 29வயது நீல் ராஜ் ஊடகத்துறையைச் சேர்ந்த 27 வயது நிஷா சிட்டால், 29வயது ஆசிஷ் படேல், உற்பத்தித் துறையைச் சேர்ந்த 28 வயது சம்ரிதி பட்டாச்சார்யா உள்ளிட்டோர் போர்ப்ஸ் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: 45 Indians make it to Forbes’ list of achievers under 30 years

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *