கனடாவில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சன்னிலியோன் கடந்த சில வருடங்களாக பாலிவுட் திரையுலகை கலக்கி வருகிறார். அவர் நடித்த ஜிஸம் 2, ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி உள்பட பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ என்ற படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் சன்னிலியோன் நடித்து வரும் ‘குச் குச் லோச்சா ஹை’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான ஒருசில நிமிடங்களில் சர்வர்களே முடங்கும் அளவுக்கு ஏராளமானோர் இந்த படத்தின் டிரைலரை டவுன்லோடு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனது படத்தின் வீடியோவை இந்திய இளைஞர்கள் அதிகளவில் டவுன்லோடு செய்து வருவது குறித்து கேள்விப்பட்ட சன்னிலியோன் ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் நாயகன் ராம்கபூர், 42 வயது திருமணமான ஒரு குடும்பத்தலைவராக நடிக்கின்றார் என்றும் அவருடன் சன்னிலியோனுக்கு ஏற்படும் நட்பால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது தான் கதை என கூறப்படுகிறது. ராம்கபூர், சன்னிலியோன், எவிலின் ஷர்மா, நவதீப் சாப்ரா, கிரண்குமார் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை தேவாங் தோலாகியா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.