‘தெறி’ கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக 40 மணி நேரம் உழைத்த அட்லி
theri2
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளின் படப்பிடிப்பிற்காக இயக்குனர் அட்லியும், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் தூங்காமல் பணி புரிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘தெறி’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரும் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் அட்லி மற்றும் கேமராமேன் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகிய இருவரும்
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக அதீத் முயற்சியில் உள்ளனர்.

இந்த சண்டைக்காட்சி 6 நவீன கேமராக்களின் உதவியோடு படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு  முன்னர் ஆங்கிள் பார்ப்பது, ஒத்திகை பார்ப்பது உள்பட பலவித பணிகளில் இருவரும் ஈடுபட்டு வருவதாகவும், இந்த நேரங்களை கணக்கிடும்போது இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் இருவரும் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், பிரபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளிவெங்கட்  உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *