40 நாட்கள் திடீரென விரதம் இருக்கும் நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

பிரபல காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் நயன்தாரா 40 நாட்கள் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளதால் அந்த 40 நாட்களிலும் விரதம் இருந்து தினமும் அம்மனை வழிபட்டு பூஜைகள் செய்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட முடிவு செய்துள்ளாராம்.

மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவனையும் இந்த 40 நாட்களில் தன்னை பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் சிவன் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது

தான் ஏற்றுக்கொண்ட கேர்கடருக்காக முழு அளவில் ஈடுபாடு கொடுப்பதில் நயன்தாரா அளவுக்கு யாரும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்று கோலிவுட் திரையுலகினர் அவரை பாராட்டி வருகின்றனர்.,

 

Leave a Reply