4 நாட்களில் ரூ.1.41 கோடி வசூல்: மக்களின் பணம் உறிஞ்சப்படுகிறதா?

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகள் செப் 1 முதல் அமல்படுத்திய நிலையில் 4 நாட்களில் ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் ரூ.1.41 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அப்பாவி நடுத்தர மக்களின் பணத்தை அரசு உறிஞ்சுவதாக ஒருசிலர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இந்த சட்டத்தை கடுமையாக பின்பற்றினால் மட்டுமே சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்தில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி தவறே செய்யாத அப்பாவிகளாக சாலையில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் இந்த மசோதாவை கடுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றே கருதப்படுகிறது. இந்த மசோதா விரைவில் தமிழகத்திலும் அமல்படுத்தப்படவுள்ளது

Leave a Reply