நேற்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஐதராபாத் கொடுத்த 220 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது

ஐதராபாத் அணியின் ரஷீத்கான் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடராஜன், சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் நதீம், ஹோல்டர் மற்றும் விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

நேற்று ஐதராபாத் அணி வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது

Leave a Reply