4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு?

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 3.32 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாக, தொழில்-வர்த்தகக் கூட்டமைப்பான சிஐஐ ((CII)) ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-2015 நிதியாண்டுடன் முடிவடைந்த 3 ஆண்டுகளில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 293 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் 2015-16 நிதியாண்டு தொடங்கி 4 ஆண்டு காலகட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் 50 சதவீதம், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளில் 73 சதவீதம் குறுந் தொழில்துறையிலும், 23 சதவீதம் சிறு தொழில்துறைகளிலும், 4 சதவீதம் நடுத்தர தொழில்துறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply