4 வயது சிறுவன் தொட்டியில் விழுந்து பலி: ஒரே வாரத்தில் 4வது மரணம்!

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பாக கவனிக்காமல் அலட்சியமாக இருப்பதால் சிறு குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலையுற்று வரும் நிலையில் இன்று சத்தியமங்கலத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் பெற்றோர்களை அலட்சியத்தால் பலியாகியுள்ளா.

ஏற்கனவே சுஜித் உள்பட 4 குழந்தைகள் ஆழ்துளை கிணறு, குளியல் தொட்டி, தண்ணீர் தொட்டி, மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றிலிருந்து பலியாகி உள்ளதால் தமிழகமே பெரும் அதிர்ச்சியில் உள்ளது

இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே திகினார் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டில், தண்ணீரை சேமித்து வைக்க கட்டப்பட்டிருந்த குட்டையில் விழுந்து 4 வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது

இந்த குழந்தை பலியானதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை தங்களுடைய முழு கண்காணிப்பில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகள் மரணம் அதிகரிக்கும் என்றும் இனிமேலாவது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *