4ஆம் கட்ட மக்களவை தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இன்று 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் விறுவிறுப்புடன் வாக்குகளை பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட தேர்தலில் பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்தியபிரதேசத்தில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளிலும், ஒடிஷாவில் 6 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 8 தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்முகாஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *