3Dயில் உருவாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கூட்டணியான ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணைகிறார்கள். இந்த திரைப்படம் 3டி-ல் உருவாகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து சிம்புவை நாயகனாக வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று முடிந்துள்ளது. முழுக்க 3டி-ல் இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ திரைப்பட முழுக்க 3டி கேமிரா கொண்டே ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதே பாணியில் இப்படத்தின் படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறார்கள்.

‘அரண்மனை’ படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியா நிறுவனம், இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *