ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருகை

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேர்களின் உடல்கள் இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கில் உச்சகட்ட போர் நடந்தபோது மோசூல் நகரை விட்டு வெளியேற முயற்சி செய்த 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் சமீபத்தில் 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

டி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இன்று ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் இறந்தவர்கள் உடல் அடங்கிய தனி விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. இறந்தவர்களின் உடல் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *