shadow

36 ஆண்டு கால மரபு உடைப்பு: ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

36 ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபை இந்தியன் ரயில்வே தற்போது உடைத்தெறிந்துள்ளது.

ரயில்வே துறையில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், ரயில்வே வாரியத் தலைவரோ அல்லது உறுப்பினர்களோ ஒரு பகுதிக்கு செல்லும் போது அந்த மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமான நிலையமோ அல்லது ரயில் நிலையங்களிலோ சென்று வரவேற்க வேண்டும் என்று கடந்த 1981ம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆண்டு ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த பழமையான மரபு தொடர்பாக சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் விவாதம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது, வெளியூர்களுக்கு செல்லும் ரயில்வே வாரியத் தலைவர் அல்லது உறுப்பினர்களை வரவேற்க அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் யாரும் செல்ல தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அதே போன்று, ரயில்வேயின் மூத்த அதிகாரிகளின் வீடுகளில், உதவியாளர்களாவும், டிராக்மேன்களாகவும் பணியாற்றும் முறையையும் நீக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அதிரடி உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உள்ள ரயில்வே அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் 30 ஆயிரம் டிராக்மேன்கள், அவர்களுக்குரிய பணிக்கு மாற்றப்படுவர்.

ரயிலில் பயணம் செய்யும் சாதாரண நடுத்தர மக்கள் முதல், ஏசி வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் வரை அவர்களின் கருத்துக்கள், தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக சாதாரண வகுப்பு முதல், ஏசி வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புகளிலும் நாம் பயணம் செய்து அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே ரயில்வே மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply