shadow

9டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தனது பதவிகாலத்தின்போது மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளதாக தற்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளன. அவர் தங்கியிருந்த டெல்லி பங்களாவில் 31 ஏ.சி. மிஷின்கள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் ஆகியவை உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இருக்கும் இந்த வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.

டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், முதல்வராக இருந்தபோது மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவு உள்ள மிகப்பெரிய அரசு பங்களாவில் தனது குடும்பத்தினர்களுடன் தங்கியிருந்தார்.  கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி நிறுவனம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் படுதோல்வி அடைந்தார். இதையடுத்த், ஷீலா தீட்சித் அரசு பங்களாவை காலி செய்தார். தற்போது கேரள கவர்னராக இருப்பதால் திருவனந்தபுரத்தில் குடியிருக்கின்றார். மேலும் டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது அவர்தங்கியிருந்த வீடு தற்போது ரூ.35 லட்சம் செலவில் சீரமைக்க்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு தொண்டர் ஒருவர் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது அவர் செய்த செலவுகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ஷீலா தீட்சித் தங்கியிருந்த அரசு பங்களாவில் 31 ஏ.சி.க்கள், 25 ஹீட்டர்கள், 15 கூலர்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவருடைய கோரிக்கையின்படி சீரமைப்பு பணிக்கு சுமார் ரூ.17 லட்சம் செலவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் ஷீலா தீட்சித் குறித்த ஆடம்பர வாழ்க்கை அம்பலமாகியுள்ளதால் டெல்லி மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும் ஷீலா தீட்சித் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தையை அவர்கள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காட்டுவார்கள் என தெரிகிறது.

Leave a Reply