3000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து மன்னனின் 28 அடி சிலை கண்டுபிடிப்பு

shadow

எகிப்து நாட்டில் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய மனிதன் ஒருவரின் பிரமாண்டமான சிலை ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

எகிப்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில மாதங்களாக எகிப்து அருகே உள்ள குடிசை பகுதிகளில் ஆராய்ச்சி செய்து வந்தனர். அப்போது சுமார் 26 அடி உயரமுள்ள சிலை ஒன்று துண்டு துண்டாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த சிலையின் அனைத்து பாகங்களும் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. எகிப்து நாட்டை ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவரான இரண்டாம் ராமிசெசஸ் என்பவரின் சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிமு 1279 முதல் 1213 வரை வாழ்ந்த இந்த மன்னின் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *