shadow

மிக அதிகம் சம்பாத்தித்த இந்திய இளைஞர் விராத் கோஹ்லி. போபர்ஸ் பட்டியல்
virat sania
இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டு வரும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான போபர்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய மில்லியனர்கள், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள், உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் உள்பட பல பட்டியல்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றது.. இந்நிலையில் அந்த  பத்திரிகை தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியல் ஒன்றை தயாரித்து அதன் முடிவை இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஆங்காங் ஆகிய நாடுகளில் உள்ள 30வயதுக்குட்பட்ட விஐபிகளின் தரவரிசையில் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என 300 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 56 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் முதலிடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். அவர் 2015ஆம் ஆண்டில் மிக அதிகமாக சம்பாதித்துள்ள இந்திய இளைஞர் என போபர்ஸ் தெரிவித்துள்ளது. இவரை அடுத்து இந்த பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் அறிவியல், கலை, நிர்வாகம், தொழில் போன்றவற்றில் சாதித்தவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

Chennai Today News: 300 of the top young leaders in Asia

Leave a Reply