shadow

36 vayathinileஜோதிகா நடித்த 36 வயதினிலே’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜோதிகா நடித்த படத்தை போலீஸார் பார்த்ததது தவறா? என்று கேட்கும் நபர்களுக்கு, இந்த படத்தை அவர்கள் பணி நேரத்தில் ஒரு கைதியோடு பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. அழகேசன், காவலர் ராமச்சந்திரன், தலைமைக் காவலர் ஞானப்பிரகாசம் ஆகிய மூவரும் கடந்த சனிக்கிழமை இரவு விசாரணைக் கைதி ஒருவரையும் கையில் விலங்கிட்டபடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் ஒரு தியேட்டரில் ’36 வயதினிலே’ படம் ஓடுவதை அறிந்த அவர்கள் அந்த படத்தை பார்க்க முடிவு செய்தனர். கையில் விலங்கோடு இருந்த கைதியோடு அவர்கள் மூவரும் படம் பார்த்தனர்.

கைதியுடன் போலீஸார் படம் பார்க்க வந்திருந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் போலீஸார்களுக்கு தெரியாமல் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்துவிட்டனர். முழு படத்தையும் கைதியுடன் பார்த்டுவிட்டு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த செய்தியை சமூக வலைத்தளங்களின் மூலம் பார்த்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். பணி நேரத்தில் கைதியுடன் சினிமா பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசாருடன் அமர்ந்து சினிமா பார்த்த கைதி யார் என்ற விபரத்தை போலீஸார் வெளியிடவில்லை.

Leave a Reply