ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உள்ள கழிவறை குப்பைத் தொட்டியில் 3 கிலோ தங்கம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று துபாயில் இருந்து ஒரு விமானம் ஜெய்ப்பூர் விமானநிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் அதில் இருந்து இறங்கி வெளியே சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் விமானநிலைய கழிவறையின் குப்பைத் தொட்டியில் கிலோ கணக்கில் தங்கம் இருப்பதாக துப்புரவுத் தொழிலாளி மூலம் விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துபாயில் இருந்து வந்த பயணிகள் யாராவது இந்த தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என்றும், விமான நிலையத்தில் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அந்த தங்கத்தை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் விமானநிலைய ஊழியர்கள் சிலரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

துபாய் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள்வி பரங்களை வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை துணை ஆய்வாளர் மீனா தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *