shadow

marsமனிதர்கள் உயிர் வாழ தகுதியான கிரகம் என்று நம்பப்படும் செவ்வாய் கிரகத்தில் குடியேற 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக விண்ணப்பித்த லட்சக்கணக்கானோர்களில் பலவித சோதனைகள் செய்து இறுதியாக 100 பேர்களை இந்த அமைப்பு தேர்வு செய்துள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர். இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இன்னும் பல கட்ட சோதனைக்கு பின்னர் இந்த 100 பேர்களில் இருந்து  ஒருசிலரை மட்டும் தேர்வு செய்து செவ்வாய்கிரகத்திற்கு வரும் 2024ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அனுப்புகிறது. இறுதிப்பட்டியலில் இந்தியர்கள் மூவரும் இடம்பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இது ஒருவழிப்பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு சென்றவர்கள் மீண்டும் பூமிக்கு வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply