shadow

எடப்பாடி அணியில் ஏன் இணைந்தோம்: தினகரன் ஆதரவு எம்பிக்கள் விளக்கம்

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கியதில் இருந்தே அந்த அணி உண்மையான அதிமுக என்றும், வலுவுள்ள அணியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.

இந்த நிலையில் இந்த இணைப்பு ஏன் என்பது குறித்து கருத்துகூறிய மூன்று எம்பிக்கள், ‘இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நாங்கள் இருப்போம்’ என்று விளக்கமளித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய ஆதரவு எம்பிக்கள் எதிரணியில் இணைந்தது குறித்து கருத்து கூறிய தினகரன், ‘பயத்தின் காரணமாக 3 எம்பிக்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் முதலமைச்சர் அணிக்கு சென்றனர்’ என்று கூறினார். மேலும் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் எனது பழைய நண்பர்கள்; தற்போதும் அவர்களை நண்பர்களாகவே கருதுவதாகவும், தனிக்கட்சித் தொடங்கும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அதிமுக எங்களின் இயக்கம், அதை மீட்டெடுப்பது எங்களுடைய கடமை என்றும் கூறினார். மேலும் இரட்டை இலை விவகாரம் தொடர்பாக 2 நாளில் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply