shadow

3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று மிசோரம் சட்டமன்ற தேர்தல். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

நடந்து முடிந்த மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மிசோரம் தேசிய முன்னணி கட்சி ஆட்சி அமைக்கிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி கண்டன. சுயேட்சைகள் 8 பேர் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து, தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதில், ஆட்சியைப் பிடித்துள்ள மிசோ தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் ஒருவர் வெறும் 3 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய முன்னணியைச் சேர்ந்த ரால்டே துய்வல் தொகுதியில் போட்டியிட்டு 5,207 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பியன்மாவியா 5,204 வாக்குகள் பெற்றார்.

வெறும் 3 வாக்குகள் மட்டும் வித்தியாசம் வந்துள்ளதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் பியன்மாவியா தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினர். மீண்டும் வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு 3 வாக்குகள் தான் வித்தியாசம் என்பது உறுதி செய்யப்பட்டது. மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் அதிகபட்சமான வாக்கு வித்தியாசமே 2,720தான்.

 

Leave a Reply