shadow

3 வருடங்களுக்கு பின் நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரெளடிதான்’ படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் நயன்தாரா நடிக்கும் படம் ஒன்றில் மூன்று வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளார். ஆம், வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இந்தப் படத்துக்காக ‘கன் இன் காதல்’ என்ற புரமோஷன் பாடலை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் மற்றும் நயன்தாரா இருவரும் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் பாடலையும் விக்னேஷ் சிவனே எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.

3 வருடங்களுக்குப் பிறகு இந்த அழகியுடன் பணியாற்றியிருக்கிறேன்’ என நயன்தாராவுடன் எடுத்த செல்ஃபியை சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply