3 மாணவிகள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா: பள்ளிகள் மூடப்படுமா?

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 3 மாணவிகள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நாமக்கல் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும், அரியலூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.