3 மணி நேர ரன்னிங் டைம், ‘ஏ’ சான்றிதழ்: சூப்பர் டீலக்ஸ் வெற்றி பெறுமா?

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் நேற்று சென்சார் சென்று ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம். அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும்

ஏ சான்றிதழ் படம் என்றாலே 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது என்பதும் அதேபோல் ஒன்றைரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்பதும் ஒரு நெகட்டிவ்வாக பார்க்கப்படுகிறது

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *