3வது டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் டீகாக் அதிரடியால் அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 134/9 20 ஓவர்கள்

தவான்: 36
ரிஷப் பண்ட்: 19
ஜடேஜா: 19
ஹர்திக் பாண்ட்யா: 14

தென்னாப்பிரிக்கா; 145/1 16.5 ஓவர்கள்

டீகாக்: 79
ஹெண்ட்ரிக்ஸ்: 28
பவுமா: 27

ஆட்டநாயகன்: டீகாக்

Leave a Reply