shadow

kaththiவிஜய்,சமந்தா நடித்த மாபெரும் வெற்றிப்படமான ‘கத்தி’ திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றாது. டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிவடைந்ததும், நவம்பர் 21 அல்லது நவம்பர் 28ஆம் தேதி இந்த திரைப்படம் தெலுங்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என ‘கத்தி’யின் தெலுங்கு உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் தாகூர் மது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியான ‘கத்தி’ 2 மணி 46 நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் தெலுங்கில் இந்த படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 2 மணி 26 நிமிடங்கள் மட்டுமே ஓடும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தாகூர் மது கூறியுள்ளார்.

அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்திய 2ஜி மற்றும் கோக் போன்ற வசனங்களை நீக்கப்படும் என டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply