லண்டனில் கொளுந்துவிட்டு எரியும் 27 மாடி கட்டிடம்: அதிர்ச்சி புகைப்படங்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் 27 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 120 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் அவர்களை காப்பாற்று முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த கட்டிடத்தின் ஜன்னல் பகுதி வழியாக பலர் தங்களை காப்பாற்றும்படி அலறி வருவதாகவும், அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க தீயணைப்பு துறையினர்களுக்கு லண்டன் மேயர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உயிரை காப்பாற்றும் பொருட்டு பலர் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து வருவதாகவும் அவ்வாறு குதித்தவர்கள் படுகாயம் அடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *