27 வருடங்கள் கழித்து அஜித் பட நடிகர் இயக்கும் படம்!

கவிதை பாட நேரமில்லை, மாதங்கள் ஏழு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் யூகிசேது, விஜயகாந்தின் ‘ரமணா’, கமல்ஹாசனின் ‘பஞ்ச தந்திரம்’ அஜித்தின் ‘அசல்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் யூகிசேது ஒரு த்ரில் கலந்த காமெடி படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முழு தகவல்களுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ள கணேஷ், ’யூகிசேதுவின் காமெடி கலந்த திரைக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அவருடன் பணிபுரிவது தனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply