shadow

இந்தியாவின் 24 பாரம்பரிய நினைவு சின்னங்களை காணவில்லை. மத்திய அமைச்சர் தகவல்

indiaஇந்தியாவில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை சரியாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் அவை அழிந்து வருவதாகவும், காணாமல் போய் வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் 24 24 பாரம்பரிய நினை வுச் சின்னங்களை காணவில்லை என்பதை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

காணாமல் போன 24 பாரம்பரிய நினைவு சின்னங்களில் மகாராஷ்டிராவில் காணப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல் திட்டை அமைப்புகள், உத்தரப் பிரதேசத்தில் மலை பாறைகளில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், ஓவியங்கள், கல் திட்டைகள், புத்த மற்றும் இந்து கோயில்கள், அசாம் மாநிலத்தில் இருந்த 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆப்கன் மன்னர் ஷெர் ஷாவின் துப்பாக்கிகள், ஹரியாணாவில் இருந்த இடைக்கால ஸ்தூபிகள், உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்த கோயில், நடுகற்கள், கல்லறை ஆகியவை அடங்கும்.

காணாமல் போன பாரம்பரிய சின்னங்களை கண்டுபிடிக்கும் பணியை இந்திய தொல்லியல்துறை இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. அதுமட்டுமின்றி சட்ட மேதை அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மால்வியா, ஜப்பான் போரின் போது சீனாவில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் துவாரகாநாத் கோட்னிஸ் ஆகியோர்களின் பிறந்த இடங்களை தொல்லியல் துறை பாதுகாப்பில் மத்திய அரசு விட்டுள்ளதாக இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

Leave a Reply