shadow

23 ஹெலிகாப்டர்கள், 200 படகுகள்: கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியதால் அம்மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, பேரிடரில் இருந்து காப்பாற்ற மாநில அரசும், மத்திய அரசும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.

இன்று 23 ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 படகுகள் மீட்புப்பணியில் இறங்கியிருப்பதாகவும், கூடிய விரைவில் வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து மக்களையும் மீட்டெடுக்கும் பணி நிறைவடையும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், ஆறுகளின் கரையோர பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான, மேடான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply