shadow

23 வருடங்கள் கழித்து பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம்

ரஜினி படம் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் வெளியாகவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய படம் வெளியாகும் தினம் தான் அவரது ரசிகர்களுக்கு தீபாவளியும் பொங்கலும்

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

இதற்கு முன் கடந்த 1995ஆம் வருடம் பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பாட்ஷா’ வெளியானது. எனவே 23 வருடங்கள் கழித்து வரும் ஆண்டு பொங்கலில் தான் ரஜினி படம் வெளியாகவுள்ளது. மேலும் கடந்த 2003ஆம் வருடம் ‘சந்திரமுகி’ திரைப்படத்திற்கு பின்னர் ரஜினி படம் எந்தவொரு பண்டிகை நாட்களிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply