shadow

22,400 டாலருக்கு ஏலம் போன ‘வயாகரா’ மோதிரம்

உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற பிளேபாய் பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவர் பயன்படுத்திய ஒருசில பொருட்கள் ஏலத்திற்கு வந்தது.

அதில் வயாக்ரா மாத்திரையை மறைத்து வைத்திருந்த இவருடைய மோதிரம் ஒன்று 22,400 டாலருக்கு ஏலம் போனது. இன்றைய நிலையில் ஒரு டாலரின் மதிப்பு ரூ.70 என்றால் இந்த மோதிரத்தின் இந்திய மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்

அதேபோல் ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் ஹியூ ஹெப்னர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட பல பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply