shadow

219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்

கடந்த சில ஆண்டுகளாக பெரிய சைஸ் டிவிக்கள் அதிகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சாம்சங் நிறுவனம் 219 இன்ச்சில் ஒரு புதிய மாடல் டிவியை சமீபத்தில் நடந்த சிஎஸ் 2019 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது

கிட்டத்தட்ட மினி தியேட்டர் போன்று இருக்கும் இந்த டிவி மாடலின் பெயர் ‘தி வால்’ என்பதாகும். பெயருக்கு ஏற்றாற்போல் பிரமாண்டமாக இருக்கும் இந்த டிவியில் 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. ஸ்க்ரீன் உள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட் வசதி இருப்பதால் குரல் மூலமாகவே நாம் விரும்பும் சேனலை தேர்வு செய்ய முடியும்

இந்த புதிய மாடல் டிவியின் விலை மற்றும் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டுக்குள் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply