21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனை: அசத்தும் கிரேசியா

ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் அரிமுகம் செய்த கிரேசியா ஸ்கூட்டர் விற்பனை நவம்பர் மாதம் 8-ம் தேதி துவங்கியது. ஹோன்டாவின் பிரீமியம் ஸ்கூட்டர் என்ற வகையில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் இகோ இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்ட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் யூடிலிட்டி பாக்கெட், சீட் ஓப்பனர் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் இத்தகைய அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டராக கிரேசியா இருக்கிறது. மேலும் டூயல்-டோன் நிறம் கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது.

கிரேசியா ஸ்கூட்டர் 1812 மில்லிமீட்டர் நீலமும், 697 மில்லிமீட்டர் அகலமாகவும், 1,146 மி்ல்லவிமீட்டர் உயரத்தில் 1260 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. தரையில் இருந்து 766 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் ஃபியூயல் டேன்க் 5.3 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கிரேசியா ஸ்கூட்டரின் முன்பக்கம் 12 இன்ச் அலாய் வீல், பின்புறம் 10 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீல்களில் 90/90-12 மற்றும் 90/90-10 டையர்கள் கொண்டுள்ளது. இதன் உயர் ரக மாடலின் முன்பக்கம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், நடுத்தர மாடலில் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் யுனிட் மற்றும் ஹோன்டாவின் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

நியோ ஆரஞ்சு மெட்டாலிக், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், பியர்ல் ஸ்பார்டன் ரெட், பியர்ல் அமேசிங் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என ஆறு நிறங்களில் கிடைக்கும் ஹோன்டா கிரேசியா இந்தியாவில் ரூ.57,897 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டர், சுசுகி அக்செஸ் 125 மற்றும் பியாஜியோ வெஸ்பா 125 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *