shadow

2027ஆம் ஆண்டில் பேட்டரி விமானம்: அமெரிக்க நிறுவனம் முயற்சி

விமானங்கள் தற்போது பெட்ரோல் மூலம் இயங்கி வரும் நிலையில் இன்னும் பத்து ஆண்டுகளில் அதாவது 2027ஆம் ஆண்டிற்குள் பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பேர் மட்டுமே செல்லும் சிறிய ரக பேட்டரி விமானத்தை தயாரித்து வெற்றி பெற்றுள்ள அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ரைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் தற்போது பெரிய அளவில் பயணிகள் விமானத்தை பேட்டரி மூலம் இயங்க வைக்க முயற்சித்து வருகின்றனர்

இந்த முயற்சி இன்னும் பத்து ஆண்டுகளில் வெற்றி பெறும் என்றும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply