shadow

2019 தேர்தலுக்கு தயாராகும் பாஜக: இன்று முதல் கொல்கத்தாவில் சுற்றுப்பயணம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு அவர் மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் பாஜக தற்போதே அதற்கான அடிப்படை வேலைகளை செய்து வருகிறது. இந்த வகையில் முதல்கட்டமாக பாஜக பலவீனமாக உள்ள இடங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சுமார் 110 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று முதல் கொல்கத்தாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், காலை 11 மணிக்கு கட்சி தலைவர்களை அமித் ஷா சந்திக்கிறார். நாளை தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Leave a Reply