shadow

2019ல் உலகின் முதல் பறக்கும் கார்

உலகின் முதல் பறக்கும் கார் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. உண்மையில் முதல் கார் இது கிடையாது என்றாலும், தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கும் மாடல் என்ற வகையில் இது முதல் கார் என கூற முடியும்.

டட்சு நிறுவனமான பால்-வி 2018 ஜெனிவா சர்வதேச மோட்டார் விழாவில் பெர்சனல் ஏர் மற்றும் லேண்ட் வெய்க்கில் லிபெர்டி-ஐ (Personal Air and Land Vehicle Liberty) அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு கான்செப்ட் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.

பால்-வி லிபர்டி மூன்று சக்கரம் கொண்ட பறக்கும் கார் ஆகும். இது ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார்-டிரைசைக்கிள் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் கிட்டத்தட்ட வாகனத்தினுள் இருக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய வாகனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சாலை மற்றும் வானில் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது.

கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் பறக்கும் காரின் எடை 680 கிலோ ஆகும். குறைந்தளவு எடை கொண்டிருப்பதால் தரையில் இருந்து குறைந்த தூரத்திலேயே டேக்-ஆஃப் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 165 மீட்டர் ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகி, 30 மீட்டரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பறக்கும் காரில் 100 பி.ஹெச்.பி. பவர் கொண்ட இரண்டு இன்ஜின்களை கொண்டிருக்கிறது. தரை மற்றும் வானில் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பால்-வி வாகனத்தை வாங்குவோர், முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் விமான ஓட்டிகளுக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

2019-ம் ஆண்டு வாக்கில் கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்றார்போல் 50 முதல் 100 வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க வால்-வி திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் பறக்கும் கார் ஒவ்வொன்றும் 150 மணி நேர சோதனைக்கு பின் விநியோகம் செய்வதற்கான சான்று வழங்கப்படுகிறது.

பால்-வி லிபெர்டி விலை ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.90 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பால்-வி லிபெர்டி ஸ்போர்ட் எனும் விலை குறைந்த மாடலை 3.35 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.18 கோடி) நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.

2019-இல் தயாரிக்கப்பட இருக்கும் உலகின் முதல் பறக்கும் கார் வீடியோவை கீழே காணலாம்..,

Leave a Reply