2019ல் ஒரே ஒரு வெற்றி: பரிதாபத்தில் பாகிஸ்தான்

2019ல் ஒரே ஒரு வெற்றி: பரிதாபத்தில் பாகிஸ்தான்

உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு, இந்த ஆண்டு சோதனையான ஆண்டாக அமைந்துள்ளது. குறிப்பாக டி20 போட்டிகளை பொருத்தவரையில் அந்த அணி இந்த ஆண்டு ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது

கடந்த 2017ஆம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றியும், கடந்த 2018ஆம் ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வெற்றியும் பெற்ற பாகிஸ்தான் அணி, இந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்று பரிதாபமான நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவிகிதம் 0.13 என்பது குறிப்பிடத்தக்கது

இதே ரீதியில் சென்றால் பாகிஸ்தான் அணி அதளபாதாளத்திற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.