2018 தீபாவளியில் மோத முடிவு செய்துவிட்ட அஜித்-விஜய்-சூர்யா
அஜித், விஜய், சூர்யா நடித்த படங்கள் ஒரே நாளில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்தது அஜித் நடித்த ஆஞ்சநேயா, விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் சூர்யா நடித்த ‘பிதாமகன்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் ஆஞ்சநேயா மட்டும் தோல்வி படமாக அமைந்தது
இந்த நிலையில் 15 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் அடுத்த வருடன் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏனெனில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தல 58’, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 62’, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 36’ ஆகிய படங்கள் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி மூன்று படங்களுமே தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.