shadow

2017 ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மஹேந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரூ.9.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கும் புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. S3, S5, S7 மற்றும் S11 என நான்கு மாடல்களில் கிடைக்கிறது.

2017 மஹேந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் புதிய அம்சங்கள் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் இன்ஜினில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18bhp செயல்திறனும், புதிய மாடலில் 6-ஸ்பீடு டார்கியூ மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட மஹேந்திரா ஸ்கார்பியோ 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் இரண்டு வித டியூனிங் – ஏற்கனவே உள்ள 120 bhp மற்றும் மேம்படுத்தப்பட்ட 138 bhp செயல்திறன் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களின் இன்ஜின் அதிகபட்சமாக 280 Nm டார்கியூ மற்றும் சக்திவாயந்த மாடல் 320 Nm டார்கியூ கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் அம்சங்கள் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுகிறது.

வெளிப்புற வடிவமைப்பில் புதிய மஹேந்திரா ஸ்கார்பியோவில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த எஸ்யுவி மாடலின் முன்புறம் மற்றும் பின்புறங்களின் ஸ்டைலிங் அப்டேட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பக்கம் புதிய ரேடியேட்டர் கிரில், வழக்கமான குரோம் ஸ்பைக் மாற்றப்பட்டு 7-ஸ்லாட் யுனிட் கொண்டுள்ளது. ஹெட்லேம்பகள் வழக்கமான கிளஸ்டர் வடிவமைப்பை கொண்டுள்ள நிலையில், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், பெரிய ஃபாக்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டுகளில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை, புதிய அலாய் வீல் மற்றும் ORVMகளை கொண்டிருக்கிறது. பின்புறத்திலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு முந்தைய கிளியர் கிளாஸ் யுனிட் மாற்றப்பட்டு சிவப்பு நிற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply