தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 2016ஆம் ஆண்டு நிறைவடைகிறது. வரும் தேர்தலில் புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்க முன்னாள் அதிபர் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

வரும் 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் கிரிஸ் கிறிஸ்டியை எதிர்த்து போட்டியிடும் வலுவான வேட்பாளராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனே சரியான தேர்வாக இருக்கும் என அக்கட்சி கருதுகிறது.

ஹிலாரி கிளிண்டனுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 18 மில்லியன் மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த இன்னொரு வேட்பாளர் ஜோ பிட்டனும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவை நாடி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும் ஹிலாரி கிளிண்டனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறபப்டுகிறது.

Leave a Reply