2016க்கு பழிக்கு பழி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசைன்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி 4-0 என்ற விகிதத்தில் தோற்கடித்தது. அதற்கு பழிவாங்க இந்தியாவை இங்கிலாந்து அணி அதே 4-0 என்ற கணக்கில் தோற்கடிக்க நல்ல வாய்ப்பு என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கூறியுள்ளார்.

தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.

3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை நடக்கிறது. பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவை 2016 தோல்விக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் லார்ட்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட்டமின்றி தோல்வியடைந்தனர். இது பெரியவர்களுக்கும், சிறவர்களுக்கும் இடையிலான போட்டி போன்று இருந்தது என்றும் சாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *