shadow

ஜெயம் ரவியுடன் முடிகிறது 2015ஆம் ஆண்டு
samuthrakani-nimirndhu-nil-jayam-ravi
இந்த ஆண்டு அதாவது 2015ஆம் ஆண்டு ‘திருவிக பூங்கா’ என்ற படத்துடன் தொடங்கி ‘பூலோகம்’ என்ற படத்துடன் முடிந்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 204 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் ஹீரோ யார்? என்றால் திரையுலகை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் சொல்லும் நடிர் ஜெயம் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன், பூலோகம், ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் ஆகிய நான்கு வெற்றி படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘தனி ஒருவன்’ திரைப்படம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘மிருதன்’ படத்தின் டிரைலர் இவ்வருடத்தின் கடைசி நாளில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வெளிவருகிறது. அதேபோல் 2016ஆம் ஆண்டின் முதல் நாளில் அதாவது ஜனவரி 1ஆம் தேதி பரத் நடித்த ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகிறது. இந்த படத்தில் மதயானைக்கூட்டம் என்ற படத்தில் நடித்த நடிகர் கதிர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

எனவே இந்த வருடம் ஜெயம் ரவியின் பூலோகம் படத்துடன் முடிவடைவதோடு, ஜெயம் ரவியின் ‘மிருதன்’ படத்தின் டிரைலருடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply