பெரும் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் திடீரென 200 நர்ஸ்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் நர்சுகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது

இந்த நிலையில் மும்பை புனே ஆகிய நகரங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த நர்ஸ்கள் சுமார் 200 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர் அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது

மேலும் நர்சுகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்பது மட்டுமன்றி தங்கள் சொந்த மாநிலமான கேரளாவிற்கு செல்ல அவர்கள் முடிவு செய்ததால் அவர்கள் ராஜினாமா செய்வதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்கம் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் ராஜினாமா செய்ததாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலும் 200 நர்சுகள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply