200 கோடி பட்ஜெட், 100 கோடி ரஜினி சம்பளம்: ‘தலைவர் 168’ படம் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சற்றுமுன் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தது போலவே சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.200 கோடி என்றும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்காக ரஜினீயின் சம்பளம் மட்டும் ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதால் இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை தயாரிக்காத அளவில் மிக பிரமாண்டமாக தயாரிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படும் வரும் 2020ஆம் ஆண்டு தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘தலைவர் 168’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

Leave a Reply