அருவியில் அருகேயுள்ள மரம் விழுந்து குளித்து கொண்டிருந்த 20 மாணவர்கள் பலி

ஆப்பிரிக்க நாடான கானா நாட்டில் உள்ள பிராங் அகாபோ என்ற பகுதியில் உள்ள கின்டாம்போ என்னும் பிரபலமான அருவிவில் நேற்று முன் தினம் குளிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வென்சி சீனியர் என்ற பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.

மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளித்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த மழையுடன் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவ மாணவர்கள் மீது விழுந்தது.

இதனால் மரத்தின் அடியில் சிக்கி 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீசாரும், மீட்பு குழுவினரும், காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *