சென்னை, கோவை உள்பட முதல்கட்ட 20 ஸ்மார்ட் சிட்டி பெயர்கள் அறிவிப்பு.
smart cities
பாரத பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றவுடன் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது இந்த 100 நகரங்களில் முதல்கட்டமாக 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 20 நகரங்களின் பெயர்கள் பின்வருமாறு:

சென்னை, கோவை, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கொச்சி, புணே, ஜெய்ப்பூர், சூரத், ஆமதாபாத், ஜபல்பூர், சோலாப்பூர், தாவண்கெரே, இந்தூர், பெலகாவி, உதய்ப்பூர், குவாஹாட்டி, லூதியானா, போபால், புது தில்லி முனிசிபல் கவுன்சில், புவனேசுவரம் ஆகியவை தேர்வு செய்யப்பட்ட நகரங்களாகும்.

 இதில் மதிப்பெண் அடிப்படையில் புவனேசுவரம், புணே, ஜெய்ப்பூர் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களையும், கோவை 13-ஆவது இடத்தையும், சென்னை 18-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

 20 ஸ்மார்ட் சிட்டி பெயர்களை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:  பொலிவுறு நகரம் திட்டத்தின் முதலாவது பட்டியலுக்கான போட்டியில் பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்டன. மொத்தமாக மத்திய அரசுக்கு வந்து சேர்ந்த 97 நகரங்கள் பட்டியலில் தற்போது 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  நகர்ப்புற மேம்பாட்டுக்காக முதலீடு செய்யப்படவுள்ள நகரங்கள் முதல் முறையாக போட்டியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது நமது கூட்டாட்சி தத்துவத்தின் பலத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.  முதல் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,802 கோடி செலவிடப்படவுள்ளது’ என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *