shadow

சீனாவில் வரலாறு காணாத அளவில் காற்றில் தூசுப்படலம். வீட்டை விட்டு வெளியேறாத மக்கள்

shadow

சீனாவில் வரலாறு காணாத அளவில் தூசுப்படலம் தோன்றியுள்ளதால் தலைநகர் பீஜிங் உள்பட பல நகரங்களில் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக தூசுப்புயல் தோன்றியுள்ளதாகவும், அதனால் எதிரே வருபவர் கூட தெரியாத அளவில் காற்று மண்டலத்தில் தூசு பரவியுள்ளது. இதனால் தலைநகர் பீஜிங்கில் மட்டும் சுமார் 20 மில்லியன் பேர் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.

மேலும் கதவு ஜன்னல் ஆகியவற்றை இறுக்கமாக மூடிக்கொள்ளும்படியும் அத்தியாவசிய தேவை இருந்தால் ஒழிய வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பிஜீங் அரசு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்டிப்பாக வெளியேற வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

English Summary: Stay indoors: 20 million Beijing residents told to stay inside as air pollution hits hazardous levels

Leave a Reply