shadow

மாலி’ நட்சத்திர ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள். 20 இந்தியர்கள் மீட்பு
maali
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் திடீரென புகுந்து அங்கு தங்கியிருந்த சுமார் 180 பேர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக நேற்று அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளிவந்தது. இவர்களில் 20 பேர் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணயக்கைதிகளாக இருந்த 20 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்ம ஸ்வராஜ் சற்று முன்னர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை பத்திரமாக மீட்க அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் முதல்கட்டமாக 80 பேர் பத்திரமாக மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் நடத்தி வருவதாகவும் விரைவில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மாலி நாட்டில் உள்ள பமாகோ நகரில் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நட்சத்திர ஓட்டலின் 7-வது மாடியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்கட்டமாக மீட்கப்பட்ட 80 பேர்களில் 20 இந்தியர்கள் இருந்ததாகவும், இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply